/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்
/
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 12:40 AM
சென்னை,
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணியை, மேயர் பிரியா துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லுார் ஆகிய ஆறு மண்டலங்களில், ஏற்கனவே நடந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்துார், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய ஒன்பது மண்டலங்களில் கணக்கெடுக்கும் பணியை, மேயர் பிரியா நேற்று, ரிப்பன் மாளிகையில் துவக்கி வைத்தார்.
இதுகுறித்து, மேயர் பிரியா கூறியதாவது:
அரசின் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முழுமையாக சென்றடைய கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, மாற்றுத்திறனாளிகளின் நிலை அறிந்து இருப்பிடம் மற்றும் தேவைப்படும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக, சமூக வழிநடத்துனர்கள் மற்றும் சமூக மறுவாழ்வு பணியாளர்கள், உரிய பயிற்சி அளிக்கப்பட்டு நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.