/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சி பள்ளிகளில் வசதிகள் குறித்து ஆய்வு
/
மாநகராட்சி பள்ளிகளில் வசதிகள் குறித்து ஆய்வு
ADDED : மே 03, 2025 11:58 PM
ஆலந்துார், சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில், குடிநீர், கழிப்பறை, ஸ்மார்ட் வகுப்புறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள், மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில், மண்டலத்தில் உள்ள பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா மற்றும் ஜெனரேட்டர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆலந்துார் மண்டல குழு தலைவர் சந்திரன் தலைமையில், மண்டல உதவி கமிஷனர் முருகதாஸ், அந்தந்த வார்டு கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், நலச்சங்க தலைவர்கள் கொண்ட குழு, இந்த ஆய்வை மேற்கொண்டது.
அதில், பள்ளிகள் திறப்பிற்கு முன், அனைத்து பள்ளிகளிலும், தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.