ADDED : நவ 20, 2025 03:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜார்ஜ் டவுன்: பணி சுமையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தினர், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் நாளான நேற்று சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, களப்பணியாளர்களின் பணிச்சுமை குறைக்க வேண்டும், ஒப்பந்த பணிமுறையை கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆய்வாளருக்காக புதிய பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட நில அளவையாளர்கள், கோஷங்கள் எழுப்பினர்.

