/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று முதல் மேடையேறுது எஸ்.வி.சேகர் நாடகங்கள்
/
இன்று முதல் மேடையேறுது எஸ்.வி.சேகர் நாடகங்கள்
ADDED : டிச 20, 2025 05:58 AM
சென்னை: ரசிகர்களை குஷிப் படுத்தும் வகையில், எஸ்.வி.சேக ரின் நகைச்சுவை நாடகங் கள், அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி கலையரங்கில், இன்று முதல் மேடைஏறுகின்றன.
சிரித்தபடியே சமூக நிகழ்வுகளை நையாண்டி செய்து, நையப்புடைக்கும் நகைச்சுவைக்கு சொந்தக்காரர் எஸ்.வி.சேகர். எழுத்து, இயக்கம், நடிப்பால், நாடகத்துறையில் தனியிடம் பிடித்தவர்.
ரோஷினி பைன் ஆர்ட்ஸ் சார்பில், இவரின் நாடகங்களான 'அல்வா, 1,000 உடைவாங்கிய அபூர்வ சிகாமணி, வால் பையன், மகாபாரதத்தில் மங்காத்தா, எல்லாமே தமாஷ்தான், கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' ஆகிய நாடங்கள், அடை யாறு, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுாரி கலை யரங்கில் இன்று, நாளை, 27, 28 மற்றும் ஜன., 1, 4ம் தேதிகளில், மாலை 7:00 மணிக்கு மேடை ஏறுகின்றன.
மேலும் விபரங்களுக்கு, 96771 60240 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

