/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கூடுதலாக ரூ.25 வசூலித்த இனிப்பகம் வீடுதேடிசென்று 1 கிலோ தர உத்தரவு
/
கூடுதலாக ரூ.25 வசூலித்த இனிப்பகம் வீடுதேடிசென்று 1 கிலோ தர உத்தரவு
கூடுதலாக ரூ.25 வசூலித்த இனிப்பகம் வீடுதேடிசென்று 1 கிலோ தர உத்தரவு
கூடுதலாக ரூ.25 வசூலித்த இனிப்பகம் வீடுதேடிசென்று 1 கிலோ தர உத்தரவு
ADDED : மே 16, 2025 12:22 AM
சென்னை, சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரவி சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு:
கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில், 'காகடா ராம்பிரசாத்' என்ற பிரபல இனிப்பகத்தில், கடந்தாண்டு ஜூலை 2ல், 250 கிராம் 'பாதாம் பிஸ்தா ரோல்' வாங்கினேன்.
கிலோ 1,700 ரூபாய் என்றனர். இதற்கான பணத்தை, கடன் அட்டை வாயிலாக செலுத்தினேன்; 425 ரூபாய்க்கு பதிலாக, 450 ரூபாய் வசூலித்தனர்.
இதுபற்றி, கடை ஊழியர்களிடம் கேட்டேன். அதற்கு, 'பில்லிங்' மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால், 25 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு விட்டது எனக்கூறி, கூடுதல் தொகையை திரும்ப வழங்கினர். கூடுதல் தொகையை வாங்க, அரை மணி நேரம் போராடினேன்.
கூடுதல் தொகை வசூலித்தது மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர் கவிதா கண்ணன் பிறப்பித்த உத்தரவு:
வாடிக்கையாளரிடம் இருந்து கூடுதலாக வசூலித்த தொகையை திருப்பி அளித்து இருந்தாலும்கூட, இனிப்பகத்தின் செயல்பாடு சேவை குறைபாட்டை காட்டுகிறது.
எனவே, புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலை ஆற்றுப்படுத்தும் வகையில், 15 நாட்களில் ஒரு கிலோ பாதாம் பிஸ்தா ரோல் இனிப்பை, அவரது வீட்டுக்கே சென்று, காகடா ராம்பிரசாத் இனிப்பகம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.
***