ADDED : மே 09, 2024 12:06 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி கோவில்
உடையவர் பல்லக்கு பெரியவீதி புறப்பாடு -- ----காலை 7:00 மணி. திருமஞ்சனம் - -மதியம் 2:00 மணி. உடையவர் புஷ்ப பல்லக்கு பெரிய வீதி புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு மங்கையர்க்கரசியார் விழா - -இரவு 7:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
மாதவ பெருமாள் கோவில்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பல்லக்கு உற்சவம் - -காலை 7:00 மணி. விசேஷ திருமஞ்சனம், தீர்த்தவாரி- - காலை 10:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
சாய்பாபா வழிபாடு
ஆரத்தி, அன்னதானம் - முற்பகல் 11:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
அகவல் பாராயணம்
கூட்டு வழிபாடு, ஜோதி தரிசனம், பசியாற்றுவித்தல் -- காலை 10:00 மணி முதல். நித்ய தரும சாலை, வேளச்சேரி.
சிறப்பு வழிபாடு
காயத்ரி தேவிக்கு சிறப்பு பூஜை -காலை 8:00 மணி. இடம்: காளிகாம்பாள் கோவில், தம்பு செட்டி தெரு, பிராட்வே.
பிரம்மோற்சவம்
சூரியபிரபை - காலை; சந்திர பிரபை - மாலை. இடம்: ஆதிகேசவ பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்.
கிருத்திகை வழிபாடு
சிவசுப்ரமணிய சுவாமி சன்னிதி: சிறப்பு அலங்கார ஆராதனை -- மாலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன்ஜி -- மாலை 6:30. இடம்: கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
நாகாத்தம்மன் கோவில்: முருகனுக்கு அபிஷேக ஆராதனை, சுவாமி புறப்பாடு -- மாலை 6:00 மணி. இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை.
சிறப்பு அலங்கார ஆராதனை - -காலை 10:00 மணி முதல். இடம்: கந்தாஸ்ரமம், கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
சொற்பொழிவு: ஸ்ரீபிரசன்ன விநாயக பக்த ஜன சபையின் கம்பராமாயணம் சொற்பொழிவு - நிகழ்த்துபவர் திருச்சி கல்யாணராமன் --- மாலை 6:30 முதல் 8:00 வரை. இடம்: ஸ்ரீசிவவிஷ்ணு கோவில், நடேச நகர், விருகம்பாக்கம்.
பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம், ஸ்ரீஅருணகிரிநாதர் அரங்கம் சார்பாக சொற்பொழிவு: துளசிதாசர் சரித்திரம். நிகழ்த்துபவர்: கணபதி சர்மா. நேரம்: மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.
இலவச கராத்தே பயிற்சி
பெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.