ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம் - -காலை 6:15 மணி, பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி, திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
பவுர்ணமியை முன்னிட்டு நிறைமணி பெருவிழா காட்சி, கபாலீஸ்வரர் அப்ப வகை சார்த்துதல் - -மாலை 6:30 மணி. சந்திரசேகர சுவாமி திருவீதி உலா, உத்திரபசுபதி நாயனார் அபிஷேகம்- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பத்மாவதி தாயார் கோவில்
பவித்ரோத்ஸவம் முன்னிட்டு மஹா பூர்ணாஹுதி, திருமஞ்சனம், கும்ப பிரோக்ஷணம் - -காலை 7:00 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரை. இடம்: தி.நகர்.
ராஜா அண்ணாமலை மன்றம்
நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் 133வது பிறந்த தினம். சிலைக்கு மாலை அணிவித்தல். காலை 9:00 மணி இடம்: பிராட்வே.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அவுடத சித்தர் மலை பவுர்ணமி கிரிவலம் மாலை 5:30 மணி, இடம்: அரசன்கழனி.
நித்ய தீப தரும சாலை
வள்ளலார் வழிபாடு. திருவருட்பா பாராயணம், திரை நீக்கி ஜோதி வழிபாடு. மாலை 6:00 மணி இடம்: புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
பிரத்யங்கிரா பீடம்
ஹோமம், பூஜை - காலை 9:00 மணி முதல்.இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், ரயில்வே கேட் வழி, சிங்கப்பெருமாள் கோவில்.
வீராத்தம்மன் கோவில்
பவுர்ணமி வழிபாடு காலை 10:30 மணி. இடம்: பள்ளிக்கரணை. நாகாத்தம்மன் கோவில் பவுர்ணமி அபிஷேகம். மாலை 6:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம்.