/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிண்டிகேட் கூட்டம் ஒத்திவைப்பு பல்கலையில் போராட்டம் வாபஸ்
/
சிண்டிகேட் கூட்டம் ஒத்திவைப்பு பல்கலையில் போராட்டம் வாபஸ்
சிண்டிகேட் கூட்டம் ஒத்திவைப்பு பல்கலையில் போராட்டம் வாபஸ்
சிண்டிகேட் கூட்டம் ஒத்திவைப்பு பல்கலையில் போராட்டம் வாபஸ்
ADDED : ஆக 09, 2025 12:24 AM
சென்னை, சென்னை பல்கலை சிண்டிகேட் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து, நேற்று துவங்க இருந்த உள்ளிருப்பு போராட்டத்தை, ஆசிரியர்கள், அலுவலர்கள் கூட்டமைப்பு வாபஸ் பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாவே, சென்னை பல்கலை கடும் நிதி நெருக்கடியில் இயங்கி வருகிறது. இந்த சூழலில், பல்கலையின் சிண்டிகேட் குழு கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில், பல்கலையில் பணியாற்றும் பேராசிரியர் மற்றும் அலுவலர்களின் ஊதியத்தை குறைப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதை கண்டித்தும், மேலும் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், பல்கலை ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பல்கலை வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, இன்று நடப்பதாக இருந்த, பல்கலையின் சிண்டிகேட் குழு கூட்டம், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டமும் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
***