/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி - 20' கிரிக்கெட் போட்டி புதுார் அரசு பள்ளி அபாரம்
/
'டி - 20' கிரிக்கெட் போட்டி புதுார் அரசு பள்ளி அபாரம்
'டி - 20' கிரிக்கெட் போட்டி புதுார் அரசு பள்ளி அபாரம்
'டி - 20' கிரிக்கெட் போட்டி புதுார் அரசு பள்ளி அபாரம்
ADDED : ஜூலை 10, 2025 12:13 AM
சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில், புதுார் அரசு பள்ளி 156 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
எம்.சி.சி., பள்ளி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான 'டி - 20' கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றன.
சேத்துப்பட்டில் நடக்கும் போட்டியில், பி.எஸ்.பி.பி., நெல்லை நாடார், சர் முத்தா, டி.ஏ.வி., - டான்போஸ்கோ உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்று உள்ளன.
அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 'நாக் அவுட்' முறையில் மோதுகின்றன. இதில், நேற்று முன்தினம் மாலை நடந்த போட்டியில், அசோக் நகர், புதுார் அரசு பள்ளி மற்றும் செயின்ட் மேரிஸ் பள்ளி அணிகள் மோதின.
டாஸ் வென்ற புதுார் அரசு பள்ளி அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
துவக்கம் முதலே அதிரடியாக ஆடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. அணியின் வீரர் அஜய் குமார், 30 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட, 63 ரன்கள் குவித்தார்.
கடினமான இலக்கை நோக்கி, அடுத்து களமிறங்கிய செயின்ட் மேரிஸ் அணி, 15.2 ஓவர்களில் 59 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், 156 ரன்கள் வித்தியாசத்தில் புதுார் அரசு பள்ளி அபார வெற்றியை பதிவு செய்தது.
டான்போஸ்கோ வெற்றி
மற்றொரு போட்டியில், டான்போஸ்கோ பள்ளி அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு, 148 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய, கே.கே.நகர் பி.எஸ்.பி.பி., அணி 16.3 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தது.
இதனால், டான்போஸ்கோ பள்ளி அணி, 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

