/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, மாம்பலம் தத்தளிப்பு
/
தி.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, மாம்பலம் தத்தளிப்பு
தி.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, மாம்பலம் தத்தளிப்பு
தி.நகர், கோடம்பாக்கம், கோயம்பேடு, மாம்பலம் தத்தளிப்பு
UPDATED : அக் 16, 2024 01:07 AM
ADDED : அக் 16, 2024 12:17 AM

சென்னை: கே.கே.நகரில் ராஜமன்னார் சாலை, ஆர்.கே., சண்முகம் சாலை, காமராஜர் சாலை, பி.டி., ராஜன் சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதே போல, பசுல்லா சாலை, ராமேஸ்வரம் சாலை, நாயர் சாலை, ஜி.என்.,செட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
தி.நகர் பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் பயணியர் அவதிப்பட்டனர்.
மேற்கு மாம்பலத்தில் கோதண்டராமர் கோவில் தெரு, கோவிந்தன் சாலை, லட்சுமி தெரு, ஸ்டேஷன் சாலை, திருவேங்கடம் தெரு, பக்தவத்சலம் தெரு, எல்லையம்மன் தெரு, புஷ்பாவதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி சில வீடுகளுக்குள்ளும் புகுந்தது. இதையடுத்து, மேற்கு மாம்பலம் லட்சுமி தெருவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
கோயம்பேடு சந்தையிலும், தொடர் மழையால் நீர் சூழ்ந்து, வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் அவதிப்பட்டனர். கோயம்பேடு, சீனிவாசா நகர், மங்கம்மா நகர், சாஸ்த்திரி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது.
கோடம்பாக்கத்தில், ரங்கராஜபுரம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் நிரம்பியதால் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டது.
அதேபோல், விருகம்பாக்கம் அருணாச்சலம் சாலை, வடபழனி துரைசாமி சாலை, ஆண்டவர் கோவில் தெரு, அசோக் நகர் 100 அடி சாலை, அசோக் நகர் 18 வது அவென்யூ, நெசப்பாக்கம் ராமாபுரம் பிரதான சாலை, வளசரவாக்கம் மண்டலத்தில் சின்ன போரூர் அண்ணா சாலை, எஸ்.வி.எஸ்., நகர் பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது.