/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டி - 20' கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
/
'டி - 20' கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
'டி - 20' கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
'டி - 20' கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் பள்ளி 'சாம்பியன்'
ADDED : ஜன 23, 2025 11:57 PM

சென்னை,
பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி - 20 கிரிக்கெட் போட்டி, நெல்லையில் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
போட்டியில், சென்னை உட்பட 23 மாவட்டங்களில் இருந்து, 108 பள்ளி அணிகள் பங்கேற்றன. நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி மற்றும் நெல்லை ஜெயேந்திர எஸ்.ஜி.ஜெ., பள்ளி அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி, முதலில் பேட் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே இழந்து, 220 ரன்கள் குவித்தது. அணியின் வீரர் ஜோஷ் பிரான்ஸ், 97 ரன்களும், ராகவ் ஆட்டமிழக்காமல் 75 ரன்களும் குவித்தனர்.
கடினமான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய நெல்லை பள்ளி அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால், 66 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை செயின்ட் பீட்ஸ் பள்ளி அணி, அபார வெற்றி பெற்றது.
போட்டியின் சிறந்த பேட்ஸ்மேனாக செயின்ட் பீட்ஸ் அணியின் ஜோஷ் பிரான்சிஸ், ஷவின் ஆகியோர் தேர்வாகினர்.
சிறந்து பந்து வீச்சாளராக ஜெயேந்திர அணியின் சரவண சங்கீத் ராஜன், தொடரின் சிறந்த வீரராக செயின்ட் பீட்ஸ் வீரர் ராகவ் தேர்வாகினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவன நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் உள்ளிட்டோர் கோப்பை வழங்கி பாராட்டினர்.

