/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார்தாரரை அதிர வைத்த தாசில்தார்
/
புகார்தாரரை அதிர வைத்த தாசில்தார்
ADDED : அக் 18, 2024 12:16 AM
செங்குன்றம், சமீபத்திய கனமழையால், செங்குன்றம் அருகே விளாங்காடுபாக்கம் ஊராட்சி, பிரியா நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கின.
இதுகுறித்து பகுதிவாசி ஒருவர் நேற்று, பொன்னேரி தாசில்தார் மதிவாணனுக்கு மொபைல்போன் வாயிலாக புகார் அளித்தார்.
அதில், விளாங்காடுபாக்கத்தில் சிவன் கோவில் குளம், நுாலகம் பின்னால் உள்ள குளம் என, இரண்டு குளமும் நிரம்பி, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்கிறது' என்றார்.
ஆனால், 'அந்த குளங்கள் பொதுப்பணித்துறைக்கு உட்பட்டது' என, தாசில்தார் பதிலளித்துள்ளார்.
புகார் அளித்தவரோ விரக்தியில், 'சார், அவர்களிடம் புகார் அளித்தால், உங்களை கேட்க கூறுகின்றனர். உங்களிடம் கூறினால் அவர்களை கேட்க கூறுகிறீர்களே?' என்றார்.
இதில் கடுப்பான தாசில்தார், 'ஏம்பா... அந்த குளம் யாருடைய கட்டுப்பாட்டில் வரும்?' என, தன் கீழ் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபடியே, இரண்டு குளமும் இப்ப தாசில்தாருடையது ஆகிவிட்டது. நானே கேட்கிறேன். உங்களுக்கு பிரச்னை தீர வேண்டும் அவ்வளவு தானே! உங்களால் இதை சரி செய்ய முடியுமா? பொறுத்திருங்கள்' என பதிலளித்தார்.