ADDED : அக் 26, 2026 03:57 PM

அ நிறம் | அளவு
பாரிமுனை: தையல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சங்கத்தின் துணை தலைவர் கோவிந்தசாமி தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று (அக்.,26), ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தையல் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். தையல் நல வாரியத்திற்காக, தனியாக நிதி ஒதுக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் இலவச சீருடை தைக்கும் தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட தையல் தொழிலாளர்கள், கோஷங்கள் எழுப்பினர்.
