
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை ரயில்வே கோட்டத்தின், புதிய கோட்ட  மேலாளராக, சைலேந்திர சிங், நேற்று பொறுப்பேற்றார்.
இவர், 1995ம் ஆண்டு, இந்திய ரயில்வே சிக்னல் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
ரயில்வே நிர்வாகத்திலும், தொழில்நுட்பத்திலும், மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதற்கு முன் தெலுங்கானாவின், செகந்திராபாத் கோட்டத்தில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளராக,  ரெயில்டெல் நிறுவனத்தில், பொது மேலாளராகப் பணியாற்றி உள்ளார்.
ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி முன்னாள் மாணவர். மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பு பொறியியலில், இளங்கலை பட்டம் பெற்றவர்.

