ADDED : ஜூன் 19, 2026 02:59 AM
அ நிறம் | அளவு
சென்னை: இந்திய விமான நிலைய ஆணையத்தின், தென்மண்டல நிர்வாக இயக்குநராக, வி.முருகானந்தம் பொறுப்பேற்றார்.
இவர், 1989ம் ஆண்டு, இந்திய விமான நிலைய ஆணையத்தில் சேர்ந்தார். விமான போக்குவரத்து மேலாண்மை அமைப்புகளில், 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.
கடந்த 2 015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம், 2016 'வர்தா' புயல், 2020ல் கொரோனா பெருந்தொற்று, 2023ல் சென்னையில் ஏற்பட்ட திடீர் மழை ஆகிய சவால்கள் மிகுந்த காலங்களில் சிறப்பாக பங்காற்றி உள்ளார்.
தற்போது, இந்திய விமான நிலைய ஆணையத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குநராக, முருகானந்தம் நேற்று பொறுப்பேற்றார்.
