/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சனாதனம் குறித்து பேசுவதா? விஷ்வ இந்து பரிஷத் கண்டனம்
/
சனாதனம் குறித்து பேசுவதா? விஷ்வ இந்து பரிஷத் கண்டனம்
சனாதனம் குறித்து பேசுவதா? விஷ்வ இந்து பரிஷத் கண்டனம்
சனாதனம் குறித்து பேசுவதா? விஷ்வ இந்து பரிஷத் கண்டனம்
ADDED : அக் 20, 2024 01:30 PM

சென்னை: 'தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒரு தலித்தையோ ஒரு வன்னியரையோ முதல்வராக ஏன் ஆக்கவில்லை என்றும், சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமலே சனாதனத்தை ஒழிப்பேன் என துணை முதல்வர் உதயநிதி பேசிக் கொண்டிருக்கிறார்' என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் பேசினார்.
திருப்பதி கோவில் பிரசாதமான லட்டுவில் கலப்படம் செய்யப்பட்டது சம்பந்தமாக
கண்டன பொதுக்கூட்டம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆண்டாள் சொக்கலிங்கம் பேசியதாவது: ஹிந்து அறநிலையதுறைக்கு மட்டும் என தனியாக அமைச்சர் நியமிக்க வேண்டும். காரணம் அமைச்சரின் கட்டுப்பாட்டில் அந்த துறை இல்லை என்பதை தினந்தோறும் கோவில்களில் நடக்கக்கூடிய சம்பவங்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன
குறிப்பாக பக்தர்களை அவமதிப்பது, பக்தர்களை நெடுநேரம் காக்க வைப்பது, ஊழல்,ஒழுங்கின்மை என்கின்ற முக்கிய விஷயங்களை சரி செய்ய வேண்டும் என்றால் அவ்வாறு தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஹிந்து அறநிலையதுறைக்கு என மட்டும் தனியாக அமைச்சர் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படும். சனாதனம் என்பது என்னவென்று தெரியாமலே சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய துணை முதல்வர் உதயநிதி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தி.மு.க., சார்பாக முதல்வராக்க முன் வருவாரா?
கருணாநிதியின் பேரன் என்கின்ற தகுதியை விட வேறு என்ன சிறப்பு தகுதி உதயநிதிக்கு இருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ்., பேரணியை துவக்கி வைக்க கொடி அசைத்த அ.தி.மு.க., வின் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பது மிகவும் வருத்தம் அளிக்க கூடிய செய்தியாக விஷ்வ ஹிந்து பரிஷத் பார்க்கிறது.
ஹிந்துக்களுக்கு தொடர்ந்து அவமானத்தையும் துரோகத்தையும் செய்து வரக்கூடிய தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., அது இரண்டு கட்சிக்கும் 2030ல் காவிக் கொடி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப்பட்ட பிறகு முடிவுரை எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.