/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகை தராத தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் 2 ஆண்டில் காலி செய்ய உத்தரவு
/
வாடகை தராத தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் 2 ஆண்டில் காலி செய்ய உத்தரவு
வாடகை தராத தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் 2 ஆண்டில் காலி செய்ய உத்தரவு
வாடகை தராத தாம்பரம் கமிஷனர் ஆபீஸ் 2 ஆண்டில் காலி செய்ய உத்தரவு
ADDED : ஆக 12, 2025 12:23 AM
சென்னை, சோழிங்கநல்லுாரில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கும், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை, இரண்டு ஆண்டுகளில் காலி செய்து, உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சரத்குமார், வெங்கடேஷ், சவுத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
சோழிங்கநல்லுாரில், எங்களுக்கு சொந்தமாக த ரைத்தளம், நான்கு அடுக்குகள் அடங்கிய கட்டடம் உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்காக, வாடகைக்கு கட்டடத்தை தரும்படி, அப்போதைய கமிஷனர் எங்களை அணுகினார்.
சொந்த கட்டடம் கட்டப்படும் வரை தற்காலிகமாக, 10.14 லட்சம் ரூபாய் மாத வாடகைக்கு தர ஒப்புக் கொண்டோம்.
கட்டடத்துக்குள், 1.10 கோடி ரூபாயில் தேவையான வசதிகளை செய்து, 2021 டிசம்பரில் ஒப்படைத்தோம்.
ஆனால், உத்தரவாதத்தை மீறி, வாடகை செலுத்த தவறினர்; 2022 செப்டம்பர் வரை, மாத வாடகை மற்றும் வரி செலுத்தப்படவில்லை. பின், மாத வாடகையாக, 6.08 லட்சம் ரூபாய் நிர்ணயித்து, எங்களுக்கு கடிதம் வந்தது. அந்த வாடகையை ஏற்காமல், இடத்தை காலி செய்து ஒப்படைக்கும்படி கேட்டோம்.
கடந்த 2022 ஜனவரி முதல் நவம்பர் வரை, கட்டடத்தை பயன் படுத்திய வகையில், 82.16 லட்சம் ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்த நிலையில், கட்டடத்தை காலி செய்யாமல், கடந்த டிசம்பர் வரைக்குமான வாடகையாக, 97.10 லட்சம் ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
எங்களுக்கு, மாதம் 4 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அலுவலகத்தை காலி செய்து, இடத்தை ஒப்படைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, தமிழக அரசின் உள்துறை தலைமை செயலர் தரப்பில், அரசு கூடுதல் பிளீடர் விஜய் ஆனந்த், தாம்பரம் போலீஸ் கமிஷனர் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தாம்பரம் போலீஸ் கமிஷனரக செயல்பாடு பாதிக்கப்படாமல் இருக்கவும், இரண்டு ஆண்டுகளுக்குள் சொத்துக்களை காலி செய்து ஒப்படைப்பதாக அளித்த உறுதிமொழியையும், இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதன்படி, ஜூன் 2025 வரையிலான மாத வாடகை நிலுவைத் தொகையை, 2 கோடியே 18 லட்சத்து 598 ரூபாயை, மனுதாரர்களுக்கு வரும் டிச., 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
கட்டடத்துக்கான மாத வாடகை, கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரை, 13 லட்சத்து 50,033 ரூபா ய் என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும். அதன் பின், 2026 மற்றும் 2027ம் ஆண்டுகளுக்கான வாடகையை, 10 சதவீதம் அதிகரித்து, ஒவ்வொரு மாதமும் தவறாமல் வாடகையை செலுத்த வேண்டும்.
இந்த நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, இரண்டு ஆண்டுகளில் கட்டடத்தில் இருந்து, கமிஷனர் அலு வலகத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். மனு முடித்து வைக்கப் படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.