/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உரிமம் புதுப்பிக்காத கழிவுநீர் லாரிகள் பறிமுதல் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
/
உரிமம் புதுப்பிக்காத கழிவுநீர் லாரிகள் பறிமுதல் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
உரிமம் புதுப்பிக்காத கழிவுநீர் லாரிகள் பறிமுதல் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
உரிமம் புதுப்பிக்காத கழிவுநீர் லாரிகள் பறிமுதல் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : ஏப் 22, 2025 12:42 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் கழிவை அகற்றும் லாரிகள், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்று இயங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனம் எப்.சி., செய்யப்பட்டு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவதோடு, எந்த நேரத்திலும் இயங்க வேண்டும்.
சேகரிக்கும் கழிவுநீரை மேற்கு தாம்பரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து சென்று, கட்டணம் செலுத்தி அகற்ற வேண்டும் என, மாநகராட்சி சார்பில் வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சியில் பதிவு செய்துள்ள லாரிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, முறையான ஆவணம் மற்றும் 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி, வாகனங்களை புதுப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, பல லாரிகள் பின்பற்றுவதில்லை.
மாநகராட்சியில் பதிவு செய்துள்ள 54 லாரிகளில், பெரும்பாலான லாரிகள் மாநகராட்சியின் விதியை முறையாக பின்பற்றி, மேற்கு தாம்பரத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டுகின்றன.
ஆனால், பம்மலில் பதிவு செய்துள்ள லாரிகள் மட்டும், விதிமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த லாரிகள், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுநீரை, மேற்கு தாம்பரத்திற்கு எடுத்து செல்லாமல், ஜி.பி.எஸ்., கருவியை ஆப் செய்துவிட்டு, கண்ட இடத்தில் மழைநீர் கால்வாயில் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளன.
இதனால், பம்மலில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஆளும் கட்சியினரின் தலையீடு காரணமாக, அந்த லாரிகள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
இந்நிலையில், மாநகராட்சியில் பதிவு செய்துள்ள கழிவுநீர் லாரிகள், இம்மாதம் இறுதிக்குள், போதிய ஆவணம் மற்றும் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்காத லாரிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர், மாநகராட்சி வாயிலாக சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என, மாநகராட்சி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.