/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹரியானாவில் பதுங்கிய குற்றவாளியை கட்டம் கட்டி துாக்கிய தாம்பரம் போலீஸ்
/
ஹரியானாவில் பதுங்கிய குற்றவாளியை கட்டம் கட்டி துாக்கிய தாம்பரம் போலீஸ்
ஹரியானாவில் பதுங்கிய குற்றவாளியை கட்டம் கட்டி துாக்கிய தாம்பரம் போலீஸ்
ஹரியானாவில் பதுங்கிய குற்றவாளியை கட்டம் கட்டி துாக்கிய தாம்பரம் போலீஸ்
ADDED : அக் 08, 2024 12:21 AM

குரோம்பேட்டை,
மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர்தமிம் அன்சாரி, 32. அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் மன்சூர் அலிகான், 30.
குரோம்பேட்டையில், தாம்பரம் மார்க்கமான பேருந்து நிறுத்தம் அருகே ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, தமிம் அன்சாரி, மொபைல் போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடையும், அதை ஒட்டி, மன்சூர் அலிகான் ரெடிமேட் துணிக்கடையும் நடத்தி வருகின்றனர்.
மார்ச், 6ம் தேதி இரவு, 10:30 மணிக்கு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றனர்.
மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் இடது பக்கவாட்டு சுவற்றில் துளையிட்டு திருட்டு நடந்தது தெரிந்தது.
துணிக்கடையின் பக்கவாட்டு மாடிப்படி வழியாக நுழைந்த மர்ம நபர்கள், மொபைல் போன் கடையில் இருந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய மொபைல் போன்கள், 1.20 லட்சம் ரூபாய் மற்றும் துணிக்கடையில் இருந்து, 30,000 ரூபாயை திருடிச் சென்றனர்.
குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில், திருட்டில் ஈடுபட்டது ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இர்பான் கான், 35, உட்பட இருவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில், அக்., 1ம் தேதி, ஹரியானா மாநிலத்திற்கு சென்ற தனிப்படை போலீசார், தவ்டு கிராமத்தில் பதுங்கியிருந்த இர்பான்கானை பிடித்து, நேற்று சென்னை அழைத்து வந்தனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

