ADDED : நவ 06, 2024 12:35 AM

அ நிறம் | அளவு
தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வெடிக்கும் என, நேற்று காலை டிக்கெட் கவுன்டர் அருகே, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் ஹிந்தியில் பேசியதாக, குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, வெடி குண்டு நிபுணர்களுடன் தாம்பரம் போலீசார் ரயில் நிலையம் முழுதும் தீவிர சோதனை நடத்தினர். இதில், மிரட்டல் புரளி என தெரிந்தது. தகவல் தெரிவித்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.
