ADDED : நவ 22, 2024 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ரயில்பாதை பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இயங்கும் மின்சார ரயில் சேவையில், இன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு, காலை 6:52, 7:33, 8:43, 9:40, 11:30, 11:41, 12:30, 12:50, மதியம் 3:15, மாலை 4:25, 5:43, 6:35, இரவு 7:57, 8:25 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு, காலை 5:12, 6:03, 7:17, 8:19, 9:00, 10:40, 11:30, 11:40, மதியம் 1:40, 2:57, மாலை 4:15, 5:10, 6:26 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை கடற்கரையில் இருந்து, நாளை புறப்படும், 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட உள்ளது என, சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.