/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் இன்று 'தமிழ் ஏ.ஐ.,' விழா
/
சென்னையில் இன்று 'தமிழ் ஏ.ஐ.,' விழா
ADDED : ஜூன் 06, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,தமிழ் செயற்கை நுண்ணறிவு துவக்க விழா, இன்று சென்னையில் நடக்க உள்ளது.
தரமணியில் உள்ள, ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில் உள்ள, டி - 7 அரங்கில், மாலை 4:00 மணிக்கு நடக்கும் விழாவில், மத்திய ரயில்வே, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
மலேஷிய அரசின் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, லண்டன் செல்ஸ்போர்ட் அரசு கவுன்சிலர் பாப்பா வெற்றி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.
தமிழ் ஏ.ஐ., எனப்படும் தமிழ் செயற்கை நுண்ணறிவு திட்ட நிறுவனர் அஷ்வத்தாமன் அறிமுக உரையாற்ற உள்ளார்.