/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்
/
தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்
தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்
தேசிய வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனைக்கு தங்கம்
ADDED : ஜன 10, 2026 05:43 AM
சென்னை: இந்திய வாள்வீச்சு சங்கம் மற்றும் ஒடிஷா வாள்வீச்சு சங்கம் இணைந்து, இருபாலருக்குமான 33வது தேசிய ஜூனியர் வாள்வீச்சு போட்டியை, ஒடிசாவின் கட்டாக்கில் உள்ள நேரு மைதானத்தில் நடத்தி வருகின்றன.
நாட்டின் 20க்கும் அதிகமான மாநில அணிகளைச் சேர்ந்த 600 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். போட்டி, 'பாயில், எப்பீ, சேபர்' என, மூன்று பிரிவுகளாக நடக்கிறது.
அந்த வகையில், ஆண்கள் ஒற்றையர் எப்பீ பிரிவில் போட்டியிட்ட, தமிழகத்தின் அன்பெலஸ் காட்வின், 19, இறுதி போட்டிக்கு தகுதி பெற்று, அதில் வெள்ளி பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
பெண்களுக்கான சேபர் ஒற்றையர் பிரிவில், தமிழகத்தின் ஜெப்ரிலின், 18, தன் அசத்தலான திறமையால், தங்கப் பதக்கம் கைப்பற்றி அசத்தியுள்ளார்.