ADDED : அக் 21, 2024 03:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:ஆந்திர மாநிலம், குண்டூரில், 35வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டிகள், கடந்த 17, 18, 19 ஆகிய நாட்களில் நடந்தன. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பங்கேற்றன.
இருபாலருக்குமான இப்போட்டியில், தமிழகத்திலிருந்து 76 வீரர்கள், 71 வீராங்கனையர் என, மொத்தம் 147 பேர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் இருபாலரிலும் அதிக வெற்றிகளைப் பெற்று, ஒட்டு மொத்தமாக 347 புள்ளிகளுடன், தமிழகம் 'சாம்பியன்' பட்டம் வென்றது. இரண்டாம் இடத்தை, கர்நாடக மாநிலம் பெற்றது.