/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தீயணைப்பு வீரர்களுக்கான போட்டி யில் தமிழகம் 'கலக்கல்'
/
தீயணைப்பு வீரர்களுக்கான போட்டி யில் தமிழகம் 'கலக்கல்'
தீயணைப்பு வீரர்களுக்கான போட்டி யில் தமிழகம் 'கலக்கல்'
தீயணைப்பு வீரர்களுக்கான போட்டி யில் தமிழகம் 'கலக்கல்'
ADDED : பிப் 08, 2024 12:42 AM

சென்னை, அகில இந்திய அளவிலான, தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பல்வேறு பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
இந்திய தீயணைப்பு வீரர்கள் மற்றும் சேவை அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகள், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலையில் நடந்தன.
இதில் வாலிபால், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் நாடு முழுதும் உள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் இருந்து, 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தின் சார்பாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தலைமையில், 32 தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் தமிழக வீரர்கள், 1,500 மீ., 200 மீ., மற்றும் 400 மீ., ஓட்டத்தில் தங்கம், உயரம் தாண்டுதலில் வெள்ளி, கபடியில் வெள்ளி, தொடர் ஓட்டத்தில் வெள்ளி என, பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை குவித்து அசத்தினர்.
அனைத்து போட்டிகள் முடிவில் தமிழக வீரர்கள், 7 தங்கம், 8 வெள்ளி, 1 வெண்கலம் என, மொத்தம் 16 பதக்கங்களை வென்று அசத்தினர்.

