/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டாப் கியரில்' செல்லும் தமிழகம் துணை முதல்வர் பெருமிதம்
/
'டாப் கியரில்' செல்லும் தமிழகம் துணை முதல்வர் பெருமிதம்
'டாப் கியரில்' செல்லும் தமிழகம் துணை முதல்வர் பெருமிதம்
'டாப் கியரில்' செல்லும் தமிழகம் துணை முதல்வர் பெருமிதம்
ADDED : ஜன 26, 2026 05:36 AM

திருவொற்றியூர்: ''இந்தியாவில், 11.19 சதவீத வளர்ச்சியுடன், தமிழகம் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது,'' என, மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி பேசினார்.
திருவொற்றியூர் - பெரியார் நகரில், தி.மு.க.,வின் சென்னை வடகிழக்கு மாவட்டம் சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக் கூட்டம், நேற்று இரவு நடந்தது.
இதில், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:
இன்னும் மூன்று மாதங்களில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பா.ஜ., தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வருவர். திருக்குறள் எல்லாம் பேசுவர்; பொங்கல் வாழ்த்து சொல்வர்.
எட்டு கோடி மக்கள் பேசிக் கொண்டிருக்கும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு 150 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளது.
ஆனால், யாரும் பேசாத சமஸ்கிருத மொழிக்கு, 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த லட்சணத்தில், தமிழகத்திற்கு, 'டபுள் இன்ஜின்' அரசு வேண்டும் என்கிறார் மோடி; உடனடியாக முதல்வர், 'டப்பா இன்ஜின்' என, பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவிலேயே, 11.19 சதவீதம் வளர்ச்சி யுடன், தமிழகம் டாப் கியரில் போய் கொண்டிருக்கிறது.
சட்டசபையில், அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை, கவர்னர் படிப்பது தான் மரபு. அதை கவர்னர் மீறுவதால், 'சட்டசபையில் இனி கவர்னர் உரையே தேவையில்லை என்ற சட்ட நடவடிக்கையை எடுப்போம்' என, முதல்வர் தெரிவித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அல்ல; அமித் ஷா திராவிட முன்னேற்ற கழகமாகி உள்ளது. நிர்வாக திறனற்றவர், கவுன்சிலராக கூட தகுதியில்லாதவர் என, கூட்டணி கட்சியினரால் வசை சொல் வாங்கியவர் பழனிசாமி
அ.தி.மு.க., கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மும்மொழி கொள்கையை திணிப்பர். 80 நாட்கள் தி.மு.க.,வினர் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., கே.பி சங்கர், மண்டல குழு தலைவர்கள் தனியரசு, ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

