/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புற்றுநோய் பாதிப்பை தடுக்க தமிழக அரசு முயற்சி: அமைச்சர்
/
புற்றுநோய் பாதிப்பை தடுக்க தமிழக அரசு முயற்சி: அமைச்சர்
புற்றுநோய் பாதிப்பை தடுக்க தமிழக அரசு முயற்சி: அமைச்சர்
புற்றுநோய் பாதிப்பை தடுக்க தமிழக அரசு முயற்சி: அமைச்சர்
ADDED : ஜன 29, 2024 01:54 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், காரப்பேட்டை புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சைக்குரிய உபகரணங்கள், இறகு பந்து மைதானம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் கூடுதல் கட்டடங்கள் திறப்பு விழா, மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன், தொழில் துறை அமைச்ர் அன்பரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் துவக்கி வைத்து, சுகாதாரத் துறை சுப்பிரமணியன் பேசியதாவது:
மருத்துவமனை வளாகத்தில் கட்டப்படும் கூடுதல் கட்டடம், பணிகள் முடித்து ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும். 20 கோடி ரூபாய் செலவில், போலியோ கேர் சென்டர் மற்றும், 20 கோடி ரூபாய் செலவில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தொற்று நோய்களால் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், தொற்றா நோய் தாக்கம் மாநில அளவில் அதிகளவில் உள்ளது.
குறிப்பாக, புற்றுநோய் பாதிப்பை தடுக்க தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. சுகாதார குறியீட்டில் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.