/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்கலை மகளிர் கபடி போட்டி தமிழக வீராங்கனையர் அசத்தல்
/
பல்கலை மகளிர் கபடி போட்டி தமிழக வீராங்கனையர் அசத்தல்
பல்கலை மகளிர் கபடி போட்டி தமிழக வீராங்கனையர் அசத்தல்
பல்கலை மகளிர் கபடி போட்டி தமிழக வீராங்கனையர் அசத்தல்
ADDED : அக் 31, 2025 01:29 AM

சென்னை:  தென்மண்டல அளவில், பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டியில், 70 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்திய பல்கலை சங்கங்களின் ஆதரவில், சென்னை விநாயகா மிஷன் பல்கலை சார்பில், தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டிகள், பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் துவங்கின.
இப்போட்டியில், தமிழகம் உட்பட தென்மாநில அளவிலான, 70 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று முன்தினம் துவங்கிய முதல் நாள் போட்டியை, இந்திய பல்கலை சங்கத்தின் பொறுப்பாளர் சுரேஷ், விநாயகா மிஷன் மா ணவர்கள் நல இயக்குநர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டங்களில், தமிழ்நாடு விளையாட்டு பல்கலை அணி, 46 - 13 என்ற புள்ளிக்கணக்கில், பெங்களூரு சிட்டி பல்கலையையும், தமிழகத்தின் பாரதிதாசன் பல்கலை, 39 - 28 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு பல்கலையையும், அண்ணா பல்கலை அணி, 47 - 45 என்ற புள்ளிக் கணக்கில் பாரதிதாசன் பல்கலையையும் வீழ்த்தின.
நேற்று நடந்த ஆட்டங்களில், விநாயகா மிஷன் பல்கலை அணி, 39 - 17 என்ற புள்ளிக்கணக்கில், கர்நாடகாவின் ராஜிவ்காந்தி பல்கலையையும், தமிழகத்தின் டாக்டர் அம்பேத்கர் பல்கலை, 49 - 12 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடகாவின் கே.எஸ்.என்., பல்கலையையும், வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கி ன்றன.

