/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய 'ரேங்கிங்' டென்னிஸ் தமிழக வீரர் சித்தார்த் முதலிடம்
/
தேசிய 'ரேங்கிங்' டென்னிஸ் தமிழக வீரர் சித்தார்த் முதலிடம்
தேசிய 'ரேங்கிங்' டென்னிஸ் தமிழக வீரர் சித்தார்த் முதலிடம்
தேசிய 'ரேங்கிங்' டென்னிஸ் தமிழக வீரர் சித்தார்த் முதலிடம்
ADDED : ஜன 22, 2024 01:18 AM

சென்னை:தேசிய ரேங்கிங் டென்னிஸ் போட்டி தனி நபர் பிரிவில், தமிழக வீரர் சித்தார்த் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அசத்தினார்.
அகில இந்திய டென்னிஸ் சங்கம் ஆதரவில், எம்.எம்., டென்னிஸ் அகாடமி சார்பில், செல்லதுரை நினைவுக்கான அகில இந்திய ரேங்கிங் டென்னிஸ் போட்டி, மேற்கு முகப்பேரில் கடந்த 13ல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இதில், தமிழகம் உட்பட நாடு முழுதும் இருந்து, 90க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். அதில், 30க்கு மேற்பட்பட்ட வீரர்கள் தகுதி சுற்றில் தேர்வாகி மோதினர்.
இப்போட்டிகள், தனிநபர் மற்றும் இரட்டையருக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. முன்னதாக, இரட்டையருக்கான இறுதிப்போட்டியில், தமிழக வீரர்கள், அனிஷ் பரோலின் - தேஜா கிருஷ்ணா ஜோடி முதலிடத்தை பிடித்தனர்.
தொடர்ந்து நடந்த தனி நபருக்கான இறுதிப் போட்டியில், தமிழக வீரர்களான சித்தார்த் ஆர்யா மற்றும் தீரஜ் சீனிவாசன் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பான இப்போட்டியானது, தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பலப்பரீட்சைக்கு பின், 6 - 3, 6 - 4 என்ற கணக்கில் சித்தார்த் ஆர்யா வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்து அசத்தினார். அவருக்கு செல்லதுரை நினைவு கோப்பை வழங்கப்பட்டது.