/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் ஏழு தங்கம் வென்று தமிழகம் சாதனை

ADDED : ஜன 05, 2025 09:45 PM

சென்னை:தேசிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீரர் - வீராங்கனையர், ஏழு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டத்தில், 35வது சேிய சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த 31ல் துவங்கி, 3ம் தேதி நிறைவடைந்தது.
போட்டியில், நாடு முழுதும் இருந்து, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் - வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
'பாயில், சேபர், எப்பி' ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில், தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடோ கமிட்டி சார்பில், பவானிதேவி உட்பட, வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
பெண்களுக்கான தனிநபர் 'சேபர்' பிரிவில், சென்னையை சேர்ந்த பிரபல வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார்.
ஆண்களில், 'பாயில்' பிரிவில், கன்னியாகுமரியை சேர்ந்த பிபிஷ், 'சேபர்' பிரிவில் அதே மாவட்டத்தை சேர்ந்த கிஷோ நிதி ஆகியோர் தங்கம் வென்றனர்.
பெண்களுக்கான 'பாயில்' அணி பிரிவில், சென்னையை சேர்ந்த ஜாயிஸ் அஸ்மித்தா மற்றும் ஸ்வர்ணபிரபா, கன்னியாகுமரி ஜெனிஷா, சேலம் கனகலட்சுமி ஆகியோர், தலா ஒரு தங்கம் என, தமிழக வீரர் வீராங்கனையர் ஏழு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.