/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தமிழ் நுால்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்'
/
'தமிழ் நுால்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்'
'தமிழ் நுால்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்'
'தமிழ் நுால்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டும்'
ADDED : ஜன 01, 2024 01:41 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர் - பாரதி பாசறையின் திருப்புகழ் 11ம் ஆண்டு தொடருரை நிறைவு விழா, மா.கி.ரமணன் எழுதிய 'அகம் புறம் அறம்' நுால் வெளியீடு மற்றும் பேராசிரியர் பாலறாவாயனுக்கு பட்டம் வழங்கி கவுரவித்தல் என முப்பெரும் விழா, நேற்று காலை நடந்தது.
திருவொற்றியூர், காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நடந்த இவ்விழாவில், 60 ஆண்டுகள் சைவ தமிழ் முழக்கம் செய்து வரும் பேராசிரியர் அருணை பாலறாவாயனுக்கு,'சைவ சித்தாந்தக் கலாநிதி' பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து, நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜெகதீசன் பேசியதாவது:
பாரதி பாசறையின் 40 ஆண்டு தொண்டு பாராட்டுக்குரியது.
ரமணன் எழுதிய, 'அகம் புறம் அறம்' நுால் வெளியிடப்பட்டு உள்ளது. இம்மூன்றும் இந்த சமூகத்திற்கு தேவை. அறம் தான் வாழ்வின் மூலதனம். அது சரியாக இருந்தால், மற்றவை சரியாக இருக்கும்.
சங்க இலக்கியங்களின்றி, மற்ற நுால்களை படித்துப் பயன்பெறுவது எளிதல்ல. தனி மனிதன் திருந்தினால் தான், சமுதாயம் திருந்தும்.
அறத்தில் இருந்து மெல்ல விலகுவதை, இந்த புத்தகத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருவரும் நல்லெண்ணம் கொண்டு செயல்பட வேண்டும். அப்போது தான் சமூகம் மேம்பாடும்.
உணவை நாமாக சுவைத்தால் மட்டுமே சுவை தெரியும். அதுபோல, புத்தகத்தை படித்து அதன் சுவையை உணர வேண்டும். தமிழ் நுால்களை இளைஞர்களிடம் கொண்டு செல்ல வேண்டிய கடமை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.