தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தரமணி பிரதான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 தரமணி பிரதான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

 தரமணி பிரதான சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : பிப் 03, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தரமணி: தரமணி பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

அடையாறு மண்டலம், 178வது வார்டு, தரமணி பிரதான சாலை, 200 அடி அகலம் கொண்டது. தாம்பரம், இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., அண்ணா சாலைக்கு முக்கிய வழித்தடமாக, இந்த சாலை உள்ளது.

ஆக்கிரமிப்பால், சாலை 60 முதல் 110 அடியாக சுருங்கியது. இதனால், விபத்து, போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.

பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்ததால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்தனர்.

ஆனால், அதற்கான ஊழியர்கள், உபகரணங்கள், வாகனங்கள் இல்லாததால், மாநகராட்சி உதவியை நாடினர்.

இதையடுத்து, நேற்று போலீஸ் பாதுகாப்புடன், மாநகராட்சி அதிகாரிகள் முன்னின்று, தரமணி பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அதே இடத்தை மீண்டும் ஆக்கிரமித்தால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆக்கிரமிப்பாளர்களை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும், இதர பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடுத்தடுத்த நாட்களில் அகற்றப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us