/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நம் நாளிதழ் செய்தி எதிரொலி ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடையை மாற்ற முடிவு

ADDED : ஜன 13, 2024 01:21 AM
மயிலாப்பூர்,
நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த டாஸ்மாக் கடையை, விரைவில் மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இருந்தன. அதில் ஒரு கடை மூடப்பட்டது. மற்றொரு கடை , பறக்கும் ரயில் நிலையம் பாலத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஒரு டாஸ்மாக் கடை மட்டும் இருப்பதால், தினமும் இங்கு கூட்டம் அலைமோதும். மேலும், சவுக்கு கட்டைகளில் தடுப்பு அமைத்து, வரிசையில் நிற்க வைத்து , மதுபானம் விற்று வந்தனர்.
சிலர் மது வாங்கி, அங்கேயே அமர்ந்து குடித்து வந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், மது அருந்தும் குடிமகன்களை பார்த்து முகம் சுளித்து வந்தனர்.
இதனால் இங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றுமாறு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
அதன்படி, பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று , பொங்கல் பண்டிகைக்கு பிறகு , குடியிருப்பு அல்லாத பகுதிக்கு கடையை மாற்றுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.