/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
' டாஸ்மாக் ' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
' டாஸ்மாக் ' ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2025 12:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜார்ஜ் டவுன்:: பணி நிரந்தரம் கோரி: ஆர்ப்பாட்டம் நடத்தியது.: சங்கத்தின் தலைவர் சிவா தலைமையில், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தி.மு.க.,வின் 2021 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல், 22 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள 'டாஸ்மாக்' ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும். காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

