/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வில்லிவாக்கம் குடியிருப்புக்குள் ரகசியமாக இயங்கும் 'டாஸ்மாக்'
/
வில்லிவாக்கம் குடியிருப்புக்குள் ரகசியமாக இயங்கும் 'டாஸ்மாக்'
வில்லிவாக்கம் குடியிருப்புக்குள் ரகசியமாக இயங்கும் 'டாஸ்மாக்'
வில்லிவாக்கம் குடியிருப்புக்குள் ரகசியமாக இயங்கும் 'டாஸ்மாக்'
ADDED : டிச 08, 2025 05:41 AM

வில்லிவாக்கம்: வெளிப்புறத்தில் பெயர் பலகை இல்லாமல், குடியிருப்புக்குள் பல ஆண்டுகளாக ரகசியமாக, 'டாஸ்மாக்' கடை இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் சுரங்கப்பாலம் அருகில், தாழங்கிணறு தெரு உள்ளது. இந்த தெருவில், கடை எண்: 481 'டாஸ்மாக்' கடை, மதுக்கூடத்துடன் இயங்கி வருகிறது.
இக்கடை, குடியிருப்புகளுக்கு மத்தியில், அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தின் உட்பகுதியில் ரகசியமாக, பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதனால், 24 மணி நேரமும் இங்கு, சரக்கு விற்பனை செய்யப்படுவதாக குடியிருப்பு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, குடியிருப்பு மக்கள் கூறியதாவது:
தாழங்கிணறு பகுதியில், பல ஆண்டுகளாக குடியிருப்புக்குள் ரகசியமாகவே டாஸ்மாக் கடை இயங்குகிறது. இதனால், 24 மணி நேரமும் மது பாட்டில் விற்பனை அமோகமாக நடக்கிறது.
அதீத போதையில் உலாவும் 'குடி'மகன்களால், இப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். விதிமீறலை தடுக்க, கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

