ADDED : பிப் 06, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார் :அம்பத்துாரைச் சேர்ந்தவர் தினேஷ், 28. இவர், நேற்று மதியம் 1:00 மணி அளவில், 'டாட்டா மேஜிக்' நான்கு சக்கர வாகனத்தில் 10 பயணியருடன் அண்ணா நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அம்பத்துார் தொழிற்பேட்டை ---வாவின் பேருந்து நிறுத்தம் அருகே, வாகனத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரியத்துவங்கியது. வாகனத்தை நிறுத்தி பயணியரை வெளியேற்றி, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அம்பத்துார் தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.