தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விஜய் ஆட்சி நடக்காது என கிண்டல்: கொத்தனார் தற்கொலை முயற்சி

 விஜய் ஆட்சி நடக்காது என கிண்டல்: கொத்தனார் தற்கொலை முயற்சி

 விஜய் ஆட்சி நடக்காது என கிண்டல்: கொத்தனார் தற்கொலை முயற்சி


ADDED : மே 09, 2026 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செம்பாக்கம்: சேலையூர் அடுத்த, செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 42; கொத்தனார். நேற்று முன்தினம் வேலை முடிந்து, நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தினார்.

அப்போது, விஜய் ரசிகரான மாரிமுத்துவிடம், அவரது நண்பர்கள், 'விஜயால் ஆட்சி அமைக்க முடியாது, ஆட்சி அமைக்கவும் விடமாட்டோம்' என, கூறியுள்ளனர். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மன வருத்தத்துடன் வீடு திரும்பிய மாரிமுத்து, கொசு விரட்டி சுருளை கரைத்து குடித்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், மாரிமுத்துவை, தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.

அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில், மாரிமுத்துவின் இதய துடிப்பு சீராக இல்லாததால், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீசார் கூறுகையில், 'த.வெ.க., தலைவர் விஜய் ஆட்சி அமைப்பது குறித்து, நண்பர்களுடன் மது அருந்தும்போது, கிண்டல் செய்துள்ளனர்.

அவர் வீட்டிற்கு சென்றதும் கணவன் - மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

அதனால், கொசு விரட்டி சுருளை கரைத்து குடித்துள்ளார்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us