/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் ஹோட்டலில் ரூ.11 லட்சம் வரி வசூல்
/
தனியார் ஹோட்டலில் ரூ.11 லட்சம் வரி வசூல்
ADDED : செப் 28, 2024 12:38 AM
சென்னை, தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாதவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
பின், வரி செலுத்தாதவர்களுக்கு பொறியாளர்கள் நோட்டீஸ் வழங்கினர். கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குப் பிறகும், வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மண்டல அதிகாரி உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையிலுள்ள கிங்ஸ் பார்க் ஹோட்டல் 11.51 லட்சம் ரூபாய் வரி செலுத்தாததால், அதிகாரிகள் 'சீல்' வைக்க சென்றனர்.
அப்போது, ஹோட்டல் நிர்வாகத்தினர், குடிநீர் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை, காசோலையாக வழங்கினர். இதையடுத்து, சீல் வைக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டது.