/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால் டாக்சி ஓட்டுநர்கள் ஏர்போர்ட்டில் மறியல்
/
கால் டாக்சி ஓட்டுநர்கள் ஏர்போர்ட்டில் மறியல்
ADDED : டிச 07, 2025 05:36 AM

சென்னை: சென்னை விமான நிலையத்தில், 100க்கும் மேற்பட்ட 'ப்ரீபெய்டு' கால் டாக்சி ஓட்டுநர்கள் நேற்று, மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தில், 35 ஆண்டுகளுக்கும் மேல், அரசு அங்கீகாரம் பெற்ற, 300க்கும் மேற்பட்ட 'ப்ரீபெய்டு' கால் டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் ஓட்டுநர்கள் 100க்கும் மேற்பட்டோர், விமான நிலைய வளாகத்தில் நேற்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
சொந்த பயன்பாட்டிற்கான கால் டாக்சிகள், வாடகை கார்கள் போல், சென்னை விமான நிலையத்தில் பயணியரை ஏற்றிச் செல்கின்றன.
சொந்த கார்களை வணிக நோக்கத்தில் பயன் படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், சட்ட விரோதமாக சென்னை விமான நிலையத்தில் சிலர் இயக்குகின்றனர். இதனால், 'ப்ரீபெய்டு' கால் டாக்சி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவலறிந்து வந்த சென்னை விமான நிலைய போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

