/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனிடம் அத்துமீறல் டெய்லருக்கு 'போக்சோ'
/
சிறுவனிடம் அத்துமீறல் டெய்லருக்கு 'போக்சோ'
ADDED : அக் 20, 2025 04:39 AM
வளசரவாக்கம்: சிறுவனிடம் அத்துமீறிய டெய்லரை போலீசார் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
போரூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் 14 வயது மகனை அழைத்துக் கொண்டு, 'கிளாசி டெய்லர் பேஷன் ஸ்டூடியோ' என்ற கடைக்கு சென்றார்.
அப்போது, மழை அதிகமாக வந்த காரணத்தால் சிறுவனை கடையிலேயே காத்திருக்க வைத்து விட்டு, அந்த பெண் வீட்டிற்கு சென்றார். இந்நிலையில், போரூர், காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த டெய்லர் சிவா, 50, என்பவர், சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், கடையை விட்டு மழையில் வெளியே ஓடினார். நடந்தது குறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுவனின் தாய், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், சிவாவை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.