ADDED : ஜூலை 24, 2025 12:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி :டீ மாஸ்டரை சரமாரியாக வெட்டிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓட்டேரியைச் சேர்ந்தவர் பால் பொன்னரசு, 60. இவர் ஓட்டேரி, குக்ஸ் சாலையில், 'ஜாய் டீ ஸ்டால்' கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் சிவா, 45, என்பவர் டீ மாஸ்டராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை கடையை திறந்த சிவா, பால் காய்ச்சிக் கொண்டிருந்தபோது, முககவசத்துடன் வந்த இருவர், சிவாவை கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பினர். காயமடைந்த சிவா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.