/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
1 கிலோ குட்கா பறிமுதல் டீக்கடை ஊழியர் கைது
/
1 கிலோ குட்கா பறிமுதல் டீக்கடை ஊழியர் கைது
ADDED : மார் 19, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனாவரம், சென்னை அயனாவரம் பகுதியில், தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நேற்று காலை, அயனாவரம் பேருந்து நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து சோதித்ததில், 1 கிலோ குட்கா மற்றும் கூல்லிப் எனும் போதை பொருட்கள் இருந்தன.
விசாரணையில், புதுக்கோட்டையை சேர்ந்த நாகராஜ், 46 என்பதும், அயனாவரம் பேருந்து நிலையம் அருகில் டீக்கடையில் பணிபுரிவதும் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.