sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வீட்டில் திருடியவரை பிடித்து வெளுத்து வாங்கிய ஆசிரியர்

/

வீட்டில் திருடியவரை பிடித்து வெளுத்து வாங்கிய ஆசிரியர்

வீட்டில் திருடியவரை பிடித்து வெளுத்து வாங்கிய ஆசிரியர்

வீட்டில் திருடியவரை பிடித்து வெளுத்து வாங்கிய ஆசிரியர்


ADDED : பிப் 09, 2025 12:41 AM

Google News

ADDED : பிப் 09, 2025 12:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, பிப். 9---

புதுகும்மிடிப்பூண்டி, பாலயோகி நகரைச் சேர்ந்தவர் சிவகுமார், 36. புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் இரவு, குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில், உள் தாழ்ப்பாளை நீக்கி வீட்டிற்குள் நுழைந்த நபர், பீரோவில் இருந்த 5 சவரன் நகை, இரு வெள்ளி கொலுசுகள், 3,000 ரூபாயை திருடி தப்ப முயன்றார்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த சிவகுமாரை, அந்த நபர் தாக்க முற்பட்டார். சுதாரித்த சிவகுமார், திருடனை வெளுத்து வாங்கி உள்ளார். மதுபோதையில் இருந்த அந்த நபர், ஆசிரியரின் தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. பின் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன், ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

காயமடைந்த அவரை, ஆம்புலன்சில் ஏற்றி கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு, தலையில் இரண்டு தையல் போடப்பட்டது.

விசாரணையில், பெரியபாளையம் அடுத்த தானாகுளம் பகுதியைச் சேர்ந்த தீனா, 28, என்பதும், அவர் மீது 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us