/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவனிடம் சில்மிஷம் ஆசிரியர் கைது
/
மாணவனிடம் சில்மிஷம் ஆசிரியர் கைது
ADDED : பிப் 13, 2025 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அசோக் நகரில் ஒரு தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு, உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாணவனை, அவரது பெற்றோர், ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையின்போது, மாணவனுக்கு பாலியல் தொல்லை நடந்துள்ளது தெரிந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, அதே பள்ளியில் பயிலும் தமிழ் ஆசிரியர், மாணவரிடம் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட தமிழ் ஆசிரியர் சுதாகர், 43, என்பவரை, 'போக்சோ' உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்தனர்.