/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தொழில்நுட்ப கோளாறு 'மெட்ரோ' சேவை பாதிப்பு
/
தொழில்நுட்ப கோளாறு 'மெட்ரோ' சேவை பாதிப்பு
ADDED : ஏப் 15, 2025 12:38 AM
சென்னை,
சென்னை விமான நிலையம் - ஆலந்துார் இடையிலான ரயில் பாதையில், நேற்று காலை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, விம்கோ நகர் செல்லும் மெட்ரோ ரயிலும், விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்ட்ரல் நோக்கி செல்லும் மெட்ரோ ரயிலும், ஒரே நடைமேடையில் இருந்து புறப்படும் என, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் அறிவிக்கப்பட்டது.
இதனால், ஒன்றாவது நடைமேடையில் இருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும், விமான நிலையத்தில் இருந்து, அனைத்து மெட்ரோ ரயில்களும் ஒரே தடத்தில் ஆலந்துார் வரை இயக்கப்பட்டன. இதனால், மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
இதற்கிடையில், சம்பவ இடத்துக்கு வந்த தொழில்நுட்ப பணியாளர்கள், ரயில் பாதையில் ஏற்பட்ட, 'பாயின்ட் பெயிலர்' தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தனர்.
இதனால், விமான நிலையம் - விம்கோ நகர் மெட்ரோ ரயில் தடத்தில், 45 நிமிடங்கள் மெட்ரோ ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சீரான மெட்ரோ ரயில் சேவை கிடைக்காததால், பயணியர் அவதிப்பட்டனர்.