/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் பாம்புடன் வாலிபர் விளையாட்டு
/
போதையில் பாம்புடன் வாலிபர் விளையாட்டு
ADDED : ஜன 30, 2024 12:30 AM
ஆவடி, ஆவடி, ஆனந்தா நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 33; தனியார் பள்ளி விளையாட்டு ஆசிரியர்.
மதுபோதைக்கு அடிமையான இவர், கடந்த 24ம் தேதி ஆவடி, பெரியார் நகர் சுடுகாட்டில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
ஆவடி போலீசார் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதில், சம்பவத்தன்று பெரியார் நகர் சுடுகாட்டில், ஆயுள் கைதி லட்சுமிபதி என்பவருடன் யுவராஜ் மது அருந்தியுள்ளார். அப்போது, அங்கு உலா வந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து விளையாடியது தெரிந்தது.
இதனால், யுவராஜ் பாம்பு கடித்து இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
யுவராஜ் பாம்பைப் பிடித்து விளையாடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.