ADDED : அக் 09, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், திருவாரூரைச் சேர்ந்த விவேகானந்தம், 32. இவர், செங்குன்றம், நேதாஜி தெருவில் உள்ள வீட்டில், தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அவருடன் சக தொழிலாளர்களான லிங்குசாமி மற்றும் மணிகண்டன் தங்கி உள்ளனர்.
கடந்த 7ம் தேதி இரவு மது போதையில், மூவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. லிங்குசாமி அடித்ததில் விவேகானந்தம் படுகாயமடைந்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, தலையில் 3 தையல் போடப்பட்டுள்ளது.
இரவு வீடு திரும்பி உள்ளார். நேற்று காலை அவர் எழுந்திருக்கவில்லை.
பாடியநல்லுாரில் உள்ள அரசு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. லிங்குசாமி தலைமறைவானார்; செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.