/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
/
பஸ் மீது பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
ADDED : செப் 23, 2024 02:26 AM
சென்னை:பாரிமுனை பேருந்து நிலையத்தில், நேற்று மாலை புறப்பட்ட தடம் எண்: 54 மாநகர பேருந்து, பூந்தமல்லிக்கு சென்று கொண்டிருந்தது.
அண்ணா சாலையில், 'சிம்சன்' சிக்னல் அருகே, ஓமந்துாரார் நிறுத்தத்தில் பயணியரை இறக்கி, வலது புறமாக திரும்பியது.
அப்போது, சென்ட்ரலில் இருந்து பல்லவன் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் இருவர், பேருந்து மீது மோதி துாக்கி வீசப்பட்டனர்.
திருவல்லிக்கேணி 'ஸ்டூடியோ' ஒன்றின் ஊழியர்களான அசோக்குமார், 25, கவுதம், 24, என்பது தெரிந்தது. ஓமந்துாரர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அசோக்குமார் இறந்தார். கவுதம் தீவிர சிகிச்சையில் உள்ளார். அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.