/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
/
குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு
ADDED : பிப் 01, 2024 12:41 AM
ராமாபுரம், குளத்தில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி, வாலிபர் உயிரிழந்தார்.
சென்னை, ராமாபுரம் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சின்னையா, 48. இவரது வீட்டின் அருகே, ஆலங்குளம் அமைந்துள்ளது.
சின்னையா நேற்று முன்தினம் மாலை, இந்த குளத்தில் குளித்தார். அப்போது அவர், மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
குளத்தில் நீச்சல் அடித்த போது, திடீரென நீச்சலடிக்க முடியாமல் மூழ்கியுள்ளார். அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மெரினா கடற்கரை மீட்பு படையினர், பல மணி நேரம் போராடி, சின்னையாவின் உடலை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ராமாபுரம் போலீசார், அவரது உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
இந்த குளத்தில் இதற்கு முன், இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.