/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டூ - வீலரோடு கால்வாயில் விழுந்து வாலிபர் பலி
/
டூ - வீலரோடு கால்வாயில் விழுந்து வாலிபர் பலி
ADDED : அக் 28, 2024 01:20 AM
உள்ளகரம்:மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் தேஜஸ், 34; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு, உள்ளகரம், எம்.ஜி.ஆர்., தெரு வழியாக, தன் இருசக்கர வாகனத்தில் பயணித்தார்.
தெருவில், போதிய வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர திறந்தவெளி கால்வாயில் விழுந்தது. இதில், வாகனத்தின் அடியில் தேஜஸ் சிக்கிக்கொண்டார்.
இரவு நேரம் என்பதால், அவரை யாரும் பார்க்கவில்லை. இதனால், கால்வாய் உள்ளேயே கிடந்துள்ளார்.
இந்நிலையில், காலை 6:30 மணிக்கு, சம்பவத்தை பார்த்த பகுதி மக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார் தேஜஸை மீட்டபோது, அவர் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
சம்பவம் குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.